இலங்கைக்காக பறக்கும் விமானத்தில் வெளிநாட்டு பெண் செய்த நெகிழ்ச்சி செயல்
இயற்கையின் சீற்றத்தால் இலங்கை பெரும் பாதிப்பை எதிர் கொண்டுள்ள நிலையில் வெளிநாட்டு பெண்ணொருவர் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைராலாகி வருகின்றது.
சமூக வலைத்தள பதிவொன்றில் இது தொடர்பில் குறிப்பிடபட்டுள்ளதாவது,

நிதி சேகரிப்பு
கொழும்பில் இருந்து, மனிதாபிமானத்திற்கு புகழ்பெற்ற சுவிஸ் நோக்கி 06-12-2025 அன்று Edelweiss விமானம் பறந்து கொண்டிருந்தது.
என் அருகே வந்த, படத்தில் உள்ள இந்தப் பெண் தானும், தனது கணவனும் இலங்கையில் தங்கியிருந்த போது அனர்த்தம் நிகழ்ந்ததாகவும், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உதவ ஜனாதிபதி நிதியம் நிதி சேகரிப்பதாகவும், அதன் வங்கி இலக்கத்தையும் காண்பித்து ஒவ்வொரு பயணியிடமும் உரையாடினார்.
விமனத்தில் 350 க்கும் மேற்பட்டவர்கள் இருந்திருக்க வேண்டும். 90 சதவீத்திற்கும் அதிகமானவர்கள் சுவிஸ் நாட்டினர். கண்ணியமாக, சுருக்கமாக, உறங்கிக் கொண்டிருந்த எந்தப் பயணிக்கும் இடையுறு இல்லாமல் அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன.
குறித்த பெண் தனக்கோ, இலங்கையில் தனக்கு தெரிந்தவர்களுக்கோ பணத்தை வைப்பிலிடுமாறு கோரவில்லை. ஜனாதிபதி அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறே குறிப்பிட்டார்.
இது இவரது இலங்கைக்கான முதலாவது பயணம். சுவிஸ் நாட்டு விமானம், சுவிஸ் பயணிகள் நிறைந்திருந்த அந்த விமானத்தில் பிரான்ஸ் நாட்டு பெண்ணான கதரின் முயற்சி போற்றத்தக்கது.