வைத்திய நிபுணர்களின் வெளிநாட்டுப் பயணம்- நெருக்கடியில் இலங்கை!
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் வைத்திய நிபுணர்கள் பலர் வெளிநாடுளுக்குச் சென்றுவிட்டார்கள்.
இதனால் வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்திய நிபுணர்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்றையதினம் (03.08.2023) இடம்பெற்றது.
இதன்போது வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்கள் இல்லாமை ஒரு குறையாக உள்ளதாகத் தெரிவித்தார்.
இறுதியாக நடைபெற்ற கலந்துரையாடலில் மன்னார் மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலைகளுக்கு இரண்டு வைத்தியர்களையாவது நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்தருணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சுகாதார அமைச்சரும் இருந்தார். முல்லைத்தீவு வைத்தியசாலையில் காணி பிரச்சினை தாமதமானதால் பாரிய கட்டிடங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
மன்னார் வைத்தியசாலையில் சீடி (CT) ஸ்கான் வந்து திரும்பி போனமை பிரச்சினையாகக் காணப்பட்டது.
விரைவில் இவ்விரு வைத்தியசாலைகளிலும் உள்ளக கட்டமைப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்வதுத் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்களுடன் சந்திப்பொன்றினை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.