பிரபல நகரில் குவிந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்!
எல்ல நகரில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுவதாக கூறப்படுகின்றது.
நாட்டில் கொரோனா தொற்றால் பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு- பதுளைக்கான ரயில் சேவைகள், மீண்டும் நேற்று முன்தினத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலாவதாக கொழும்பிலிருந்து பதுளைக்குச் சென்ற ரயிலில், அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்துள்ளனர்.
இதில் சுமார் 100 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எல்ல பிரதேசத்துக்கு வருகைத் தந்ததாக , எல்ல ரயில் நிலையத்தின் ரயில் நிலைய அதிபர் அசேந்திர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் எல்ல நகரிலுள்ள சுற்றுலா விடுதிகள், ஹோட்டல்கள் என்பன சுற்றலாப் பயணிகளால் நிறைந்து காணப்பட்டமையும் அவதானிக்க காணக்கூடியதாக இருந்தது.