கதிர்காமம் கந்தன் ஆலயத்திற்கு பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்கு
கதிர்காமம் கந்தன் ஆலயத்திற்கு பாதயாத்திரை செல்லும் அடியார்களிடம் முக்கிய வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
பாதை திறக்கும்போது யாத்திரை செல்லும் அடியார்கள் பிளாஸ்டிக் போத்தல் மற்றும் பொலித்தீன் கொண்டு செல்வதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.
ஏனெனில் இன்னும் எத்தனையோ வருடங்களுக்கு எமது உறவுகள்தான் அடியார்களாக செல்லப் போகின்றார்கள். அவர்களுக்கும் நாம் செய்வதை சொல்லிவிட்டால் அவர்களும் அதனை பின் தொடர்வார்கள்.
பிளாஸ்டிக் கழிவுகளை நாம் வீசுவதால் வன ஜிவராசிகள் அவற்றினை உண்டு அழிவின் விளிம்பிற்கு செல்லும் நிலை ஏற்படும் . எனவே அவற்றை பாதுகாக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.
எமது நாடு, எமது பாரம்பரிய இடம். யாத்திரை எப்போது தொடங்கியது என்பது இதுவரை இல்லை. தொடர்ந்து செல்கின்றோம். முருகனின் அருள் மட்டுமல்ல, அதிசயங்களும் நிறைந்த புண்ணிய பூமி. எவ்வளவோ நேர்த்திகள் அவ்வளவிற்கும் அங்குள்ள தெய்வங்களின் அருளாசிகள்.
காணக்கிடைக்காத அற்புதங்கள். வருகின்றவர்களின் எண்ணங்களை, கஷ்டங்களை நிறைவேற்றும் புண்ணிய தலமாக கதிகாம கந்தன் ஆலயம் திகழ்கின்றது.
ஒரு வருடத்தில் ஒருமுறைதான் இந்த பாதயாத்திரை வருவதுண்டு. அதனை நாமே சரியான பாதையில் ஒழுக்கநெறி தவறாது கடைப்பிடித்து செயற்பட்டால் இனிவரும் சந்ததியினரும் வழி தவறாது செயற்படுவார்கள்.