இன்றிலிருந்து யாழ் நிலா சேவைக்கு; மகிழ்ச்சியில் மக்கள்!
இன்று முதல் யாழ் நிலா ரயில் சேவையானது கல்கிசைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ளது.
வார இறுதி நாட்களில் இயக்கப்படும் யாழ் நிலா சேவையானது இன்று இரவு 10 மணிக்கு கல்கிசை நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
வார இறுதி நாட்களில் சேவை
ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு காங்கேசன்துறை நிலையத்திலிருந்து கொழும்பு திரும்பும் ரயில் மறுநாள் காலை 6 மணியளவில் கல்கிசை நிலையத்தை சென்றடையும்.
பயணிகளிடம் முதல் வகுப்பு இருக்கைக்கு நான்காயிரம் ரூபாயாகவும் , இரண்டாம் வகுப்பு இருக்கைக்கு மூவாயிரம் ; ரூபாயாகவும் இரன்றாம் வகுப்பு இருக்கைக்கு இரண்டாயிரம் , ரூபாயாகவும் அறிவிக்கப்படடுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவிற்கு சிறப்பு சேவை
இதேவேளை, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ரயில் பயணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நல்லூர் கந்தன் தேர்த் திருவிழா ஒகஸ்ட் 21ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 16ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. அதேவேளை கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ரயில்கள் டிசம்பர் மாதம் வரை மட்டுமே இயங்கும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
மாஹோ சந்திக்கும் அனுராதபுரத்துக்கும் இடையிலான ரயில் மார்க்கம் புனரமைக்கப்படுவதால், டிசம்பர் மாதம் முதல் வடக்கு மார்க்கத்திற்கான ரயில் சேவைகள் மீண்டும் பாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.