பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் அடிதடி; வீசாரணைகள் ஆரம்பம்(Video)
கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர் மீது ஊழியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் கடந்த சனிக்கிழமை மாலை இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவத்தின் பின்னனி
வாகன நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு துணிகளை வாங்க வந்த இரண்டு வாடிக்கையாளர்கள், வெளியில் வரும்போது தமது வாகனத்தை தடுக்கும் வகையில் மற்றொரு வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததை பார்த்துள்ளனர்.
இதனையடுத்து அருகில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததுடன் மற்றைய வாகனத்தின் சாரதியிடம் வாகனத்தை எடுக்குமாறு பல தடவைகள் கூறிய போதும் வாகனத்தை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதாக சம்பந்தப்பட்ட தம்பதிகள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்தே குறித்த வாடிக்கையாளருக்கும், துணிக்கடை ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Update: More footage circulating on social media showing employees of the House of Fashions store in Bambalapitiya embroiled in a brawl with a customer.
— DailyMirror (@Dailymirror_SL) January 22, 2023
A Police investigation is underway over the incident.#News #SriLanka pic.twitter.com/0PxNi3V6zN
இந்த சம்பவத்தை வாடிக்கையாளர்கள் தங்கள் கையடக்கத் தொலைபேசியில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரவலாக பகிர்ந்து கொண்டுள்ளனர்.