வேலைக்காரியை திட்டிய முதலாளிக்கு 8 ஆண்டுகளாக சிறுநீர் கலந்து சப்பாத்தி; பழிவாங்கிய பணிப்பெண் !
வீட்டில் வேலைப் பார்க்கும் பணிப்பெண் ஒருவர், 8 ஆண்டுகளாக தனது முதலாளி குடும்பத்தினருக்கு சிறுநீர் கலந்த சாப்பாடு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் தொழில் அதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினருக்கு கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
சமையல் அறையில் கேமராவில் சிக்கிய காட்சி
மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்ற நிலையிலும் சரியாகவில்லை. இந்நிலையில் வீட்டில் பணிப்பெண் சாப்பாட்டில் எதாவது கலந்து இருப்பாரோ? என்ற சந்தேகம் எழுந்தது.
இதை கண்டுபிடிப்பதற்காக கையடக்க தொலைபேசி கேமராவின் வீடியோவை இயக்கி சமையல் அறையில் மறைத்து வைத்திருந்தார் தொழில் அதிபர் .
அப்போது சமையல் வேலையும் செய்யும் பெண் சமையல் அறையில் ஒரு பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கிறார். சிறிது நேரம் கழித்து அதே பாத்திரத்தில் சமையல் செய்கிறார்.
இந்த வீடியோவை பார்த்து தொழில் அதிபர் அதிர்ச்சி அடைந்துள்ளார். தொழில் அதிபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். பெண்ணை கைது செய்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில்,
ரீனாவின் முதலாளி சிறிய தவறுகளுக்கு கூட அடிக்கடி கண்டிப்பதாகவும் கூறிய ரீனா, இதில் ஆத்திரமடைந்த அவர், மாவில் சிறுநீரை பலமுறை கலந்து சப்பாத்தி செய்து கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் 8 ஆண்டுகளாக தனது முதலாளிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சிறுநீர் கலந்து சப்பாத்தி கொடுத்த பணிப்பெண் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது