வெள்ளத்தில் மிதக்கும் கம்பஹா வீதிகள்! (Photos)
கம்பஹா மாவட்டத்தில் பல பிரதேசக்களிலும் இன்று (04) அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்களுடைய இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் தொழிலுக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, நீர்கொழும்பு மற்றும் அயற்பிரதேசங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நீர்கொழும்பு நகரின் சில உள் வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. தளுபத்தை பல்லன்சேனை வீதி, வெளிஹேன பிரதேசத்துக்கு செல்லும் பேஸ் லைன் வீதி, வெளிஹேன வீதி ஆகிய வீதிகளின் சில பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக வாகன சாரதிகளும் பொதுமக்களும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். நாட்டில் சீரற்ற கால நிலை காரணமாக மீனவர்கள் தொழிலுக்கு செல்லவேண்டாம் என வளிமணடலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.