யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை... வெளியான ட்ரோன் காட்சிகள்!
இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 138,944 குடும்பங்களை சேர்ந்த 465,746 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்றையதினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கனமழை, மின்னல், திடீர், சுழல் காற்று, மண்சரிவு, மற்றும் மரங்கள் சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாய நிலை உருவாகியதுடன் தாழ் நில பகுதிகளிலுள்ள மக்களின் வதிவிடங்கள், வணக்க ஸ்தலங்கள், பொது இடங்கள் என அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி வெள்ளக்காடானது.
இந்த நிலையில் மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி பாடசாலைகளிலும் பொதுநோக்கு மண்டபங்களிலும் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
இதேவேளை, அவர்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்கள் மற்றும் இதர தேவைகளை பல்வேறு அமைப்புக்களும் வழங்கி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் 19560 குடும்பங்களை சேர்ந்த 64621 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 161வீடுகள் பகுதியளவிலும் 3 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் நாவலடி பிரதேசம்
ஊர்காவற்றுறை பிரதேசம்
யாழ் கல்லுண்டாய் வெளி பகுதி
யாழ் காக்கைதீவு பகுதி
யாழ் குருநகர் பகுதி