விமானங்களில் பயணம் செய்வதற்கு முன்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள்! இவைதான்

Travel Flight Health Tips Health Food
By Shankar Feb 19, 2022 12:33 AM GMT
Report

விமானங்களில் பயணம் செய்வதற்கு முன்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

விமானங்களில் பயணம் செய்வதற்கு முன்பாக எதையாவது சாப்பிடலாம் என்ற உணர்வு நம்மில் அனைவருக்கும் ஏற்படும். இது இயற்கையாக ஏற்படும் ஒரு உணர்வுதான்.

இருப்பினும், விமானங்களில் ஏறுவதற்கு முன்பாக ஒரு சில உணவுகளை நிச்சயமாக சாப்பிடுவதில் இருந்து தவிர்க்க வேண்டும். அந்த உணவுகளை தவிர்த்து விடுவது பயணம் சிறப்பாக இருப்பதற்கு உதவி செய்யும். 

ஆனால் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்? என்பது தெரியாமல் அனைத்தையும் சாப்பிட்டு விடும் பழக்கம் நிறைய பேருக்கு உள்ளது. உடலுக்கு மிகவும் நல்லது என்று நினைத்து சாப்பிடும் சில உணவுகள் கூட விமான பயணத்தின்போது பிரச்னைகளை ஏற்படுத்தி விடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. எனவே விமானத்தில் ஏறுவதற்கு முன்பு தவிர்க்க வேண்டிய உணவுகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆப்பிள் : ஆப்பிள் உண்மையிலேயே ஆரோக்கியமான ஒரு பழம்தான். ஆனால் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அதனை சாப்பிடுவது நல்லதல்ல. சத்தானது என்பதால், விமானத்தில் ஏறுவதற்கு முன்பு பலரும் ஆப்பிளை சாப்பிட்டு விடுகின்றனர். ஆனால் விமான பயணத்தின்போது ஆப்பிள் செரிமானம் ஆவது கடினம். இதன் காரணமாக நீண்ட நேர அசௌகரியம் ஏற்படலாம். 

அத்துடன் வாயு தொல்லையும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த வாயு காரணமாக உங்கள் வயிறு முழுமையாக இருப்பது போன்றும், இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, நல்லது என நினைத்து ஆப்பிளை சாப்பிட்டு விடாதீர்கள். 

பீன்ஸ் : உங்கள் வயிற்றில் அதிகப்படியான வாயுவை உருவாக்கும் எந்தவொரு உணவையும், விமானத்தில் ஏறுவதற்கு முன்பு தவிர்ப்பது நல்லது. இந்த வகையில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகளில் பீன்ஸ் முக்கியமானது. ஏனெனில் இது வாயுவை உருவாக்கும். இது உங்களுக்கு மட்டுமல்லாது, உங்களுக்கு அருகில் அமர்ந்திருப்பவருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

இந்த வாயு உங்களுக்கு எத்தகைய தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்த தர்ம சங்கடத்துடன், விமானம் பயணம் முழுவதும் வயிறு உப்பிய நிலையிலேயே நீங்கள் பயணிக்க வேண்டியதிருக்கும். எனவே விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஆப்பிளை போன்று பீன்ஸ் சாப்பிடுவதையும் தவிர்த்து விடுங்கள். 

வறுத்த உணவுகள் : வறுத்த உணவுகளை தற்போது அனைவருமே விரும்புகின்றனர். இதற்கு 'நோ' சொல்வது கடினம்தான். ஆனால் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு வறுத்த உணவுகளுக்கு 'நோ' சொல்வதுதான் நல்லது. ஏனெனில் வறுத்த உணவுகள் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த உணவுகள் நன்றாக வறுக்கப்படுவதால் அதிகமான எண்ணெய்யை கொண்டிருக்கும்.

அத்துடன் சோடியமும் அதிகளவில் இருக்கலாம். இது விமான பயணத்தின்போது உங்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும். வயிறு உப்புசம் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே சுவைக்கு அடிமையாகி வறுத்த உணவுகளை அதிகளவில் சாப்பிடுவதை தவிர்த்து விடுவது உங்கள் பயணம் சிறக்க உதவி செய்யும். 

காபி : விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு கப் காபி குடித்து விட்டு செல்லும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. விமான பயணம் ஏற்கனவே உங்கள் உடலில் உள்ள நீர் சத்தை வற்ற செய்கிறது. ஆம், விமான பயணங்களின்போது நீரிழப்பு பிரச்னை ஏற்படும். இப்படிப்பட்ட ஒரு சூழலில், நீரிழப்பு தன்மையை அதிகம் கொண்ட காபியை குடிப்பது சிறந்ததாக இருக்காது.

இதன் காரணமாக உங்களுக்கு தலைவலி ஏற்படலாம். அல்லது குமட்டல் போன்ற உணர்வு ஏற்படலாம். எனவே காபி பிரியர்கள் அனைவரும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக தங்களது வாயை கட்டி வைத்து கொள்வது நல்லது. இதன் மூலம் தலைவலி, குமட்டல் போன்ற அசௌகரியங்கள் இல்லாமல், பயணத்தை சிறப்பாக நிறைவு செய்யலாம். 

சுவிங்கம் : சுவிங்கம் மெல்லும்போது உங்கள் உடலுக்குள் அதிகப்படியான காற்று செல்வதற்கு நீங்கள் அனுமதிக்கிறீர்கள். இதன் காரணமாக வாயு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படலாம். மேலும் சர்க்கரையும், செயற்கை சுவையூட்டிகளும் கூட வாய்வு பிரச்னைக்கு காரணமாகலாம். எனவே சுவிங்கம் மெல்வதை தவிர்த்து விடுவதும் சிறந்தது.


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8

மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US