டிசம்பர் மாதம் கோடீஸ்வர யோகம் பெறும் ஐந்து ராசிகள்! எவை தெரியுமா?
ஒவ்வொரு மாதமும் கிரகங்களில் மாற்றத்தினால் ஒருவருடைய ஜாதகத்தில் நன்மை தீமை என்ற மாற்றங்கள் உண்டாகின்றன. அதிலும் முக்கியமாக செவ்வாய் சூரியன், புதன், சுக்கிரன் இது போன்ற கிரகங்களின் இட மாறுதல் காரணமாக பலரின் வாழ்க்கையில் சந்தோஷம் , துன்பங்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும்.
அந்தவகையில் டிசம்பர் மாதமும் செவ்வாய் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களின் பெயர்ச்சி நடக்கவிருக்கிறது. இதன் மூலம் குறிப்பிட்ட ஐந்து ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகப்போகிறது. அதன்படி கீழ்வரும் ஐந்து ராசிகள் கோடீஸ்வர யோகம் பெறவுள்ளனர்.
மேஷம்:
டிசம்பர் மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் மாற்றம் நல்ல பலனை கோடுக்கிறது. அவ்வாறு குருபகவான் இவர்களின் இலாப ஸ்தானத்தில் அமர்வதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் எந்தவித தடையும் இல்லாமல் வந்து கொண்டிருக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து பணங்கள் வர ஆரம்பிக்கும். மனதில் குழப்பங்கள் நிறைந்து தடைபட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள் இனிதே நடந்தேறும்.
சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். புதியதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் டிசம்பர் மாதத்தில் தொடங்க நல்ல லாபம் அடைய முடியும். மொத்தத்தில் இந்த மாதம் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் மாதமாகும்.
மிதுனம்:
டிசம்பர் மாத கிரக பெயர்ச்சி மிதுன ராசிகாரர்களுக்கு லாபம் தரக்கூடிய மாதமாக அமைகின்றது. குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் நிம்மதி நிலவும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பிள்ளைகள், பெற்றோர்களின் உறவு பலப்படும்.
ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள். திரும்ப வராது என்றிருந்த பணம் உங்கள் கையில் வந்தடையும். நீங்கள் கடன் பெற்றிருந்தால் அந்த கடனை அடைத்து விடும் வாய்ப்பு கிடைக்கும்.வேலை செய்யும் இடத்தில் பணி உயர்வு உண்டாகும்.
சிம்மம்:
இந்த மாதம் மிகவும் இனிமை தரக்கூடிய மாதமாக அமைகிறது. கணவன்-மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் தீர்ந்து சுமூகமான உறவு நிலவும். புதியதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் இந்த மாதத்தில் தொடங்குவது நற்பலனை கொடுக்கிறது.
வியாபாரத்தில் முன்னேற்றம் இல்லை, லாபம் இல்லை என நினைப்பவர்களுக்கும் இந்த மாதம் நல்ல லாபம் கிடைக்க இருக்கிறது. ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பும் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும்
தனுசு:
இந்த மாதம் உங்கள் வேலையிலும், தொழிலும் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பணி உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். நிற்கவும் நேரமில்லாமல் தொழிலில் லாபம் கிடைக்கும் வகையில் வியாபாரம் நடைபெறும்.
பெரிய முதலீடு செய்து தொழில் தொடங்குவது என்பதை தவிர்க்க வேண்டும். சிறிய முதலீட்டில் ஏதாவது ஒரு சிறிய தொழிலைத் தொடங்கலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.
கும்பம்:
வேலை மற்றும் வியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் மூலமாக பணப்பிரச்சனை தீரும். நீங்கள் முதலீடு செய்துள்ளவற்றிலிருந்து லாபம் கிடைக்கும்.
ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடுடன் இருப்பீர்கள்.
முடிந்தவரை இந்த மாதம் நீங்கள் செய்யும் வேலை மற்றும் தொழிலை மட்டும் மிகுந்த கவனத்துடன் செய்து வந்தாலே உங்களுக்கு இந்த மாதம் நன்மையைத் தரக்கூடிய மாதமாக உங்களுக்கு அமையும் என சொல்லப்பட்டுள்ளது.