இலங்கையில் ஐந்து பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பதவி உயர்வு!
இலங்கையில் ஐந்து பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கமைய பொலிஸ் மா அதிபரினால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, பொலிஸ் அத்தியட்சகர் ஜெ.சந்திரகுமார, ஓய்வுநிலை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் அத்தியட்சகர் ஆர். நூர்தீன், விசேட பணியகத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகவும், பொலிஸ் அத்தியட்சகர் எம்.ரிஃபாத் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.