இராகலையில் தீயில் கருகிய ஐவர் உயிரிழப்பு....உருக்கமாக இடம்பெற்ற இறுதிக்கிரியை
இராகலையின் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட முதலாம் பிரிவு தோட்டத்தில் இடம்பெற்ற தீ விபத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர்..
இதனையடுத்து இவர்களது இறுதிக்கிரியை தோட்ட மயானத்தில் இடம்பெற்றது. இவ்ரகள் இவரின் உடலுக்கும் தோட்ட மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் தோட்ட மக்கள் யாரும் இன்று பானைக்கு செல்லவில்லை.
இராகலையில் ஏற்பட்ட தீவிபத்தால் நிகழாது உயிரிழப்புகள் தொடர்பில் நுவரெலியா சட்ட வைத்திய அதிகாரியால் திறந்த அறிக்கை வெளியிடப்பட்டது. பிரேத பரிசோதனையின்போது உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராததால் திறந்தறிக்கை வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு சுமார் பாத்து மணியளவில் மண்ணால் ஆன வீடு ஒன்று தீப்பிடித்துள்ளது.
அந்த சமயத்தில் தாய்,தந்தை,மகள் மற்றும் மகளின் இரு குழந்தைகள் உள்பட ஐவரும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். இஸ்மாபாவம் குறித்து இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

