பெண்ணொருவர் படுகொலை; கைதான ஐந்து மாத கர்ப்பிணி!
வெல்லம்பிட்டிய லான்சியாவத்தையிள்ள வீடொன்றில் பெண்ணொருவர் படுகொலை செய்து அவரது 50 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை அபகரித்து சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இப் படுகொலையை செய்து தப்பிச் சென்ற பணிப்பெண் மற்றும் அவரது சட்டரீதியற்ற கணவர் எனக் கூறப்படும் நபரும் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் சமிதுபுர பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ஆண் ஒருவரும், கொலைசெய்யப்பட்ட பெண்ணின் வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்த திஹாரிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் என தெரிய வந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள்
குறித்த நபர்களிடமிருந்து இரண்டு தங்கச் சங்கிலிகள், 6 தங்க வளையல்கள், 6 தங்க மோதிரங்கள், ஒரு கைக்கடிகாரம், கையடக்கத் தொலைபேசி, 17 வெளிநாட்டு நாணயக்குற்றிகள், ஒரு டெப்லட் மற்றும் ஒரு ஜோடி பெண்கள் அணியும் பாதணிகள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 15ஆம் திகதி 60 வயதான மொஹமட் ஜெகிர் பாத்திமா நசீர் என்பவர் அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.