பூட்டப்பட்டிருந்த வீட்டிற்குள் சடலங்களாக கிடந்த குடும்பம் ; தனி நபர் அரங்கேற்றிய கொடூரம்
உத்தரப் பிரதேசத்தில் பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், காஸ்கஞ்ச் பகுதியில் உள்ள வீடு ஒன்று கடந்த மூன்று நாட்களாக பூட்டப்பட்டிருப்பதை அக்கம்பக்கத்தினர் கண்டனர்.

ஐந்து பேர் சடலங்களாக மீட்பு
உடனே இதுகுறித்து பொலிஸாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். நிகழ்விடத்துக்கு விரைந்த பொலிஸார், வீட்டின் கதவை உடைத்து பார்த்தனர்.
வீட்டினுள் 5 பேரின் சடலங்கள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சத்யவீரின் சடலம் கயிறு ஒன்றில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.
மீதமுள்ள நான்கு சடலங்களும் படுக்கையில் ஒரு போர்வையின் கீழ் காணப்பட்டன. தடயவியல் குழு மற்றும் மோப்ப நாய் படை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில், சத்யவீர் தனது குடும்பத்தின் மற்றவர்களைக் கொன்றுவிட்டு பிறகு தானும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
சடலங்களை மீட்டு பொலிஸார் கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மரணத்திற்கான காரணம் கண்டறிய வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் காஸ்கஞ்ச் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.