உற்சாகமாக மீன்பிக்கும் ரஷ்ய ஜனாதிபதி! வைரலாகும் புகைப்படம்
ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புடின் ( Vladimir Putin) கொரோனா தனிமைப்படுத்துதல் முடிந்துவிட்ட நிலையில் அவர் மீன் பிடித்த ஈடுபட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி புடினுக்கு நெருங்கிய வட்டத்தில் இருந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். ஜனாதிபதி புடின் (Vladimir Putin) ஸ்புட்னிக் V தடுப்பூசி இரண்டு டோஸும் செலுத்திக் கொண்டபோதும் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.
அதிபர் புதின் பூரண ஆரோக்கியத்துடனேயே உள்ளார். அவர் தனது வழக்கமான அலுவல்களை மேற்கொள்வார் என்றும், ஆனால் தனிமைப்படுத்துதலில் அவர் தனது அலுவல்களை மேற்கொள்வார் எனவும் க்ரெம்ளின் மாளிகை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதி புடின் ( Vladimir Putin))தனது தனிமைப்படுத்தல் காலம் முடிந்ததால் பழையபடி உற்சாகமாக மீன் பிடித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்மையில் புதின் குதிரையில் அமர்ந்துவாறு கையில் வேட்டைத் துப்பாக்கியுடன் ஒரு புகைப்படம் வெளியிட்டபோது அது இணையத்தில் வைரலான நிலையில், தற்போது, புடின் (Vladimir Putin) சேறும் சகதியும் நிறைந்த பகுதியில் மீன் பிடிக்கும் புகைப்படங்களை க்ரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ளது.


