பெறுமதியான வலம்புரிச் சங்குடன் கைதான மீனவர்
பேருவளை பிரதேசத்தில் உள்ள வர்த்தக குழுவொன்றுக்கு 5 இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரிச் சங்கு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற மீனவர் ஒருவர் கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயது மீனவரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொறிவைத்துபிடித்த பொலிஸார்
கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வலம்புரிச் சங்கைக் கொள்வனவு செய்யும் வர்த்தக குழு என்ற போர்வையில் சந்தேக நபரை கட்டுநாயக்க பிரதேசத்திற்கு வரவழைத்து கைது செய்துள்ளனர்.
மீனவரது மீன்பிடி தொழிலில் பெரிதாக வருமானம் எதுவும் இல்லாத காரணத்தினால் தன்னிடமிருந்த வலம்புரிச் சங்கை விற்பனை செய்ய முயன்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை இன்று (27) மினுவாங்கொடை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.