முதல் முதலில் இலங்கை ஜனாதிபதி ஒருவர் யாழ் குப்பிளான் கிராமத்திற்கு விஜயம்!(Photos)
யாழ்ப்பாணத்துக்கு 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , குப்பிளான் கிராமத்திற்கும் சென்றுள்ளதுடன், விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் விவசாயிகளையு,ம் சந்தித்து கலந்துரையாடினார்.
இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்ட வெங்காயம் செயற்பாட்டையும் பார்வையிட்டு இயந்திரத்தால் வெங்காயத்தையும் நாட்டினார். அத்தோடு மிளகாய் செய்கையை மேற்கொள்ளும் விவசாய தோட்டங்களை பார்வையிட்டு கலந்துரையாடினார்.
குப்பிளான் கிராமத்திற்கு இதுவே முதல் முறை
விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக யாழ் மாவட்ட கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
நிகழ்வில் வெங்காயத்தினை நடுகை செய்யும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர்களும் முன்னாள் ஜனாதிபதியால் கெளரவிக்கப்பட்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை முதல் முதலில் இலங்கை ஜனாதிபதி ஒருவர் யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்திற்கு விஜயம் செய்துள்ளமை இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.