டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதன்முறை! அதிர்ச்சியடைந்த இந்திய ரசிகர்கள்
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் 11 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்தனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இவ்வாறு நடப்பது இதுவே முதன்முறையாகும்.
தென்னாப்பிரிக்காவில் கேப் டவுன் மைதானத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்றையதினம் (03-01-2024) தொடங்கியுள்ளது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 55 ஓட்டங்களுக்கு இந்திய பந்துவீச்சாளர்களின் சுழலில் சுருண்டது.
இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் 6 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் முகேஷ் குமார் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் களத்தில் இருந்தனர்.
அப்போது கே.எல் ராகுல் அடித்து ஆட முயற்சி செய்யும் போது 8 ஓட்டங்களில்ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் 11 பந்துகளில் ஒரு ஓட்டங்கள் கூட எடுக்காமல் அடுத்தடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தனர்.
இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 6 வீரர்கள் டக் அவுட்டாகி வெளியேறிய புதிய சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.