இந்தியாவில் முதல்முதல் பதிவான நிகழ்வு; உண்மையை மறைக்கும் திருநங்கை தம்பதி!
இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் திருநங்கை தம்பதிக்கு நேற்று குழந்தை பிறந்ததாக கூறப்படும் நிலையில், என்ன குழந்தை என்பதை இப்போதைக்கு தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு நகரைச் சேர்ந்த ஜியா பாவல் ஜஹாத் திருநங்கை தம்பதி கடந்த 3 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பாவல் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஜஹாத் 8 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்தியாவில்இதுதான் முதல் முறை
ஒரு குழந்தைக்கு தாய் தந்தையாக வேண்டும் என்ற எங்கள் கனவு விரைவில் நிறைவேறப்போகிறது. திருநங்கை ஒருவர் கர்ப்பமாகி இருப்பது நாட்டிலேயே இதுதான்முதல் முறை என அவர் பதிவிட்டி ருந்தார்.
இந்நிலையில் திருநங்கை தம்பதிக்கு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் நேற்று குழந்தை பிறந்தது. திருநங்கைக்கு குழந்தை பிறந்தது இந்தியாவில்இதுதான் முதல் முறை ஆகும்.
இதுகுறித்து ஜியா பாவல் நேற்று கூறுகையில், “ஜஹாத்துக்கு அரசு மருத்துவமனையில் காலை 9.30 மணிக்கு அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பிறந்தது. குழந்தையும் ஜஹாத்தும் நலமாக உள்ளனர். என்ன குழந்தை என்பதை இப்போதைக்கு தெரிவிக்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.
கேரளவைச் சேர்ந்த ஜியா பவல். இவர் ஆணாகப் பிறந்து பின்னர் திருநங்கையாக மாறியவர். அதே மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஜஹத். இவர் பிறப்பில் பெண்ணாக இருந்து பின்னர் ஆணாக மாறியவர். இருவரும் திருமணம் செய்து கடந்த 3 ஆண்டுகளாக தம்பதியாக வாழ்ந்து வருகின்றனர்.