புத்தளம் மாவட்டத்தில் கலைப்பிரிவில் தமிழ் மொழி மூலம் முதல் இடத்தைப் பெற்ற மாணவி
இன்றைய தினம் வெளியான உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், புத்தளம் கற்பிட்டி - அக்கரைப்பற்று பிரதேச வரலாற்றில் முதற் தடவையாக கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி இவ்வாறு மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றிருப்பது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்
இவர் அரசியல் விஞ்ஞானம் , பொருளியல் மற்றும் தகவல் , தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய மூன்று பாடங்களிலும் முறையே "ஏ" சித்தியைப் பெற்றுக் கொண்டதுடன், 2.1417 இஸட் புள்ளிகளையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சிறுவயதிலிருந்தே ஒரு சட்டத்தரணியாக வரவேண்டும் என்பது தனது இலட்சியம் எனவும் அந்த இலட்சியத்தை நோக்கிப் பயணித்ததாகவும் கலைப்பிரிவில் புத்தளம் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி முஹம்மட் பஸ்லுல் பாரிஸ் ஹானிம் தெரிவித்தார்.
மேலும் , கல்வி கற்பதற்காக அடிக்கடி ஊக்கப்படுத்தி , மேலதிக வகுப்புகள் உட்பட கற்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்த அன்புப் பெற்றோர்களுக்கும் கொத்தாந்தீவு மு.ம.வி அதிபர் உட்பட கற்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் கூறினார்.