முதல் காதல் இதுதான்..... லாஸ்லியா கூறிய தகவலால் க்ஷாக்கான ரசிகர்கள்!
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த இலங்கைப்பெண்ணான லாஸ்லியா மரியநேசன், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார்.
பிக்பாஸில் சக போட்டியாளரான கவின் மீது காதலில் விழுந்த லாஸ்லியா, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின், பிரேக் அப் செய்து அதிர்ச்சி கொடுத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை லாஸ்லியாவுக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் அவரை பின் தொடர்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நடிகை லாஸ்லியா நடிப்பில் முதன்முதலில் நடித்த திரைப்படம் ப்ரெண்ட்ஷிப்.

இப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்தாண்டு வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
முதல் படம் சரிவர ஓடாததால், தான் அடுத்ததாக பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ள கூகுள் குட்டப்பா படத்தை பெரிதும் நம்பி உள்ளார் லாஸ்லியா.
படத்தில், பிக்பாஸ் பிரபலம் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் லாஸ்லியா. இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய சபரி சரவணன் இயக்கி உள்ளனர்.

இது மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்நிலையில், நடிகை லாஸ்லியா அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய முதல் காதல் குறித்து பகிர்ந்துள்ளார். இதன்போது,
“என்னுடைய முதல் காதல் பள்ளிப் பருவத்தில் தான், அதுவும் ஒருதலைக் காதல். அந்த பையனுக்கு இப்போ கல்யாணமே ஆகிடுச்சு. பேட்டியில் முதல் முத்தம் பற்றி கேட்டபோது, தான் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் அப்போது அந்த பையன் தனக்கு முத்தம் கொடுத்தாகவும் லாஸ்லியா கூறி ரசிகர்களுக்கு க்ஷாக் கொடுத்துள்ளார்.