யாழ்ப்பாண ஜனனி நடிக்கும் நிழல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
பிக் பாஸ் புகழ் யாழ்ப்பாண ஜனனி நடிக்கும் நிழல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நடிகை ஜனனி.
பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற ஜனனி இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜனனிக்கு ஜாக்பாட் அடித்தது போல, விஜய்யுடன் லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
விஜய்யுடன் லியோ
சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே விஜய், த்ரிஷா என டாப் நடிகர்களின் படத்தில் நடித்தார். லியோவில் அவருக்கு கிடைத்த கதாப்பாத்திரம் சிறியதாக இருந்தாலும், அதில் கன கச்சிதமாக பொருந்தி நடித்திருந்தார் ஜனனி.
விஜய்யுடன் இணைந்து நடித்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி பலரின் பாராட்டை பெற்றார். தற்போது, ஜனனி நிழல் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி, தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில், படத்தை வெளியிடுவதற்கான அடுத்த கட்ட வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது .