திருக்கோவில் பிரதேசத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு
கல்முனை திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவகப் பிரிவில் முதலாவது கொரோனா மரணம் இன்று பதிவாகிட்யுள்ளதாக திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகானகாந்தன் தெரிவித்தார்.
அதன்படி திருக்கோவில் தம்பட்டை கிராமத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு கோரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக அக்கரைப்பற்று கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் உள்ள 13 பிரதேச சுகாதார வைத்தி அதிகாரப் பிரிவில் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இதுவரை காலமும் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்த வீதத்தில் இருந்து வந்தது.
எனினும் தற்போது முதலாவது கொரோனா மரணம் எற்பட்டு இருப்பது மிகவும் கவலையளிப்பதாக திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கூறியுள்ளார்.
திருக்கோவில் பிரதேசத்தில் தற்பேபாது கொரோனா தொற்று வீதம் அதிகரித்துச் செல்லும் நிலையில் பிரதேசத்தில் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளத் தவறியவர்கள் தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதுடன் சுகாதார விதிமுறை கடைப்பிடிக்குமாறும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பி.மோகனகாந்தன் பிரதேச மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.