முதல்முறையாக முள்ளிவாக்கால் கஞ்சி வழங்கிய பௌத்த பிக்கு!
கடந்த 2009 ஆண்டு மே18 ஆம் திகதி இலங்கை அரச படைகளால் அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை உலகையே உலுக்கியது.
அந்தவகையில் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் தமிழர் பிரதேசமெங்கும் அனுக்ஷ்டிக்கப்பட்டு வருவதுடன் புலம்பெயர் தேசங்களிலும் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு வாரம் நினைவேந்தப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படுகொலை நாளான மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.
காலி முகதிடலில் கோட்டாகோகம போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூவின மக்களும் ஒன்று கூடி இன்று முள்லிவாய்க்கால் நினைவேந்தலினை சுடரேற்றி அஞ்சலித்தனர்.
அதோடு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பௌத்த பிக்கு ஒருவரால் அங்குள்ளவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அதேவேளை 30 வருட யுத்தத்தை வெற்றிகொண்டதாக சிங்கள் மக்களிடம் மார்தட்டிக்கொண்ட ராஜபக்ச குடும்பம் இன்று அந்த மக்களாலேயே அடித்து துரப்படுகின்ற சம்பவமும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.
அதுவும் அதே முள்ளிவாய்க்கால் படுகொலை வாரத்தில் மஹிந்த ராஜபக்க்ஷ தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.