விளையாட்டில் தோற்றவர்களை பார்த்து சிரித்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு! 7 பேர் பலி
பிரேசிலில் பில்லியர்ட்ஸ் விளையாட்டில் தோல்வி அடைந்த நபர்களை பார்த்து சிரித்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
பிரேசிலில் உள்ள மடோ கிராஸோ மாநிலத்தில், பில்லியர்ட்ஸ் விளையாட்டின் போது இரண்டு நபர்கள் விளையாட்டில் தோல்வி அடைந்துள்ளனர்.
அவ்வாறு தோல்வி அடைந்தவர்களை மீண்டுமொரு முறை விளையாட வருமாறு வெற்றி பெற்றவர்களை அழைத்துள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் அந்த நபர்கள் தோல்வி அடைந்ததால், அங்கிருந்தவர்கள் அவர்களைப் பார்த்து சிரித்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து விளையாட்டில் தோல்வி அடைந்த நபர்கள், தங்களைப் பார்த்து ஏளனமாக சிரித்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தில் 12 வயது சிறுமி உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய எட்கர் ரிக்கார்டோ மற்றும் எசேக்கியாஸ் ரிபேரோ ஆகிய 2 நபர்களை பொலிஸாரை வலை வீசி தேடி வருகின்றனர்.