வர்த்தகர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
கந்தானை பியோ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று வெள்ளிக்கிழமை (04) காலை 6.10 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னனியில் பாதாள உலகக் குழு
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட வீடு வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமானது எனவும் சந்தேக நபர்கள் அவரிடம் கப்பம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துபாயில் மறைந்திருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ஹீனத்தியான மகேஷ், கந்தானை சுதுமல்லி மற்றும் கம்பஹா வருண ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இநிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.