மன்னாரில் பாரிய தீ விபத்து: எரிந்து நாசமடைந்த பல ஏக்கர் காடுகள்!
மன்னார் மாவட்டம் கீரி பகுதியில் உள்ள தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தாமான காணிக்கு அருகில் ஏற்பட்ட தீப்பரவலால் பல ஏக்கர் காடுகள் எரிந்து சேதமடைந்துள்ளது.
குறித்த தீப்பரவல் இன்றைய தினம் (23-09-2023) சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
தீப்பரவல் காரணமாக அப்பகுதியில் உள்ள மரங்கள் புதர்கள் உட்பட அணைத்திலும் தீப் பரவிய நிலையில் அதிக காற்று காரணமாக தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து வீசிய காற்று காரணமாக அருகருகில் இருந்த காடுகளுக்கும் தீப் பரவல் அடைந்தது.
இதனைத்தொடர்ந்து அருகில் இருந்த பொது மக்கள் மற்றும் கடற்படையின் தொடர் முயற்சியினால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இருப்பினும் தீப் பரவல் காரணமாக அப்பகுதியில் காணப்பட்ட ஆயிரக்கணக்கான பணை மரங்கள் உட்பட பல ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகியுள்ளது.
மன்னாரில் உரிய தீயணைப்பு பிரிவு காணப்படாமையினால் வவுனியா தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்ட போதிலும் அனைத்து எரிந்து அனையும் வரை தீயணைப்பு சேவை சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.