கொழும்பு புறக்கோட்டை கடையொன்றில் பொருட்கள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரை
கொழும்பில் புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சைனா தெரு சந்திக்கு அருகிலுள்ள கடையொன்றில் நேற்று (14) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாநகர சபை தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தின் போது ஏற்பட்ட புகையால் சுவாசிக்க சிரமப்பட்டு ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எனினும் யாருக்கும் காயமோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்தில் கடையில் இருந்த பொருட்கள் மற்றும் சொத்துக்கள் எரிந்து தீக்கிரையாகியுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ள புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.