நுவரெலியாவில் தீ விபத்து;16 வீடுகள் சேதம்
நுவரெலியா இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை மத்திய பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் நேற்று இரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.
அங்குள்ள 9வது இலக்க நெருங்குடியிருப்பிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த வீடுகளில் இருந்த 6 குடும்பங்களை சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மக்கள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர்.
தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன என்று மக்கள் தெரிவித்ததுடன் ஒரு சில பொருட்கள் மாத்திரமே பாதுகாக்ககூடியதாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை எவ்விதமான உதவிகளும் வழங்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துவதுடன் , அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் வந்து பார்க்கவில்லை என சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் இராகலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு ள்ளனர்.