பிரித்தானியாவை உலுக்கிய பயங்கர சம்பவம்... தாய் மற்றும் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு!
பிரித்தானியாவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் தாய் மற்றும் அவரது 3 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் ஒன்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் பிராட்போரட்டில் நகரில் அமைந்துள்ள வீடொன்றில் அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தீ விபத்து சம்பவத்தில் 29 வயதான பிரையோனி காவிட் மற்றும் அவரது 09 வயது மகள் டெனிஸ் பர்டில், 05 வயது மகன் ஆஸ்கார் பர்டில் மற்றும் இளைய மகள் ஆப்ரி பர்டில் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, சந்தேகத்தின் பேரில் 39 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் அயலவர்கள் தெரிவிக்கையில்,
அதிகாலை 1.45 மணியளவில் வீடு தீப்பற்றி எரிந்ததாகவும் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு பொலிஸாரின் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
3 குழந்தைகளில் இளையவரான ஆப்ரே, தனது 2வது பிறந்தநாளுக்கு 6 வாரங்களுக்குப் பிறகு இந்த சோகமான சம்பவத்தை சந்தித்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டதாக பொலிஸாரின் துப்பறியும் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியே அதிர்ச்சியில் உறைந்துள்ளதுடன், நண்பர்கள் மலர்களை வைத்து கவலைகளை வெளியிட்டுள்ளனர்.