சற்றுமுன்னர் பிரித்தானியாவில் பயங்கர சம்பவம்: வெளியேறிய மக்கள்
பிரித்தானியாவில் உள்ள நகரமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து, நகரம் முழுவதும் தீப்பிழம்புகள் மற்றும் பெரிய புகை மூட்டங்கள் ஏற்பட்டுள்ளன.
பிரித்தானியாவில், ஹல் நகர மையத்திற்கு மேற்கே சுமார் 8 மைல் தொலைவில் உள்ள Hessle அருகே உள்ள பிரிட்ஜ்வுட் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதேவேளை அப்பகுதியில் பலத்த சத்தம் கேட்டதாக அருகில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு ஹம்பர்சைட் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை, விரைந்து சென்றுள்ளனர். அவர்கள், தீவிபத்துக்கு சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் விடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறு அறிவுறுத்தியயுள்ளனர்.
#Hessle #Hull Fire. From plastic factory @BBCLookNorth pic.twitter.com/R1auFsZ8xB
— 5haw (@SH4WB) November 24, 2021
மேலும், இந்த விபத்தினால் பட்ஃபீல்ட் சாலையில் உள்ள பல வீடுகள் காலி செய்யப்படுவதாக சர்வதேச ஊடகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Hessle-ல் வசிக்கும் Anthony Whitley என்பவர், Saxon Way அருகே உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையின் மேற்கூரை தீப்பற்றி எரிவதைக் கண்டதாகக் கூறினார்.
மேலும் சம்பவ இடத்தில் இருந்த மக்கள் பலர், அங்கு பலத்த சத்தங்கள் மற்றும் வெடிப்புகள் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த தீவிபத்து காரணமாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்காக உள்ளூர் தேவாலய மண்டபம் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்ஜ்வுட் பிளாஸ்டிக் தொழிற்சாலை 2009-ல் தொடங்கப்பட்டது, அது முன்பு தாம்சன் பிளாஸ்டிக் என்ற பெயரில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
