இலங்கையில் கண் வில்லை கொள்வனவு செய்யும்போது இடம்பெறும் மோசடி!
இலங்கையில் 1 பில்லியன் ரூபா பெறுமதியான கண் வில்லைகளை கொள்வனவு செய்யும் போது, சுகாதார செயலாளர் உரிய நிதி விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.
கொழும்பில் இன்றைய தினம் (30-07-2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்தபோதே அந்த சங்கத்தின் தலைவர் சமல் சஞ்ஜீவ இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், வைத்தியர்களுக்காக அடுத்த பாதீட்டில் குறிப்பிடத்தக்க வேதன உயர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணங்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்றைய தினம் (30-07-2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே இதனைத் தெரிவித்தார்.