கதிர்காமம் கோவிலில் நிதி மோசடி; CIDஇல் ஆஜராகும் பஸ்நாயக்க நிலமே
இலங்கையில் பிரசித்த பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றாகவுள்ள , கதிர்காமம் கோவிலில் நிதி மோசடி இடம்பெற்றதாக கூறி சிவில் ஆர்வலர் ஒருவர் செய்த முறைப்பாடு தொடர்பில் பஸ்நாயக்க நிலமேவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கதிர்காமத்திற்கு வந்து இது தொடர்புடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்யலாம் என்று, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், கதிர்காம தேவாலய பஸ்நாயக்க நிலமே, பொது நிதியை செலவழித்து கதிர்காமத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை என்றும், அடுத்த வாரம் கொழும்பில் இருப்பதால், குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்து உரிய வாக்குமூலம் அளிக்கலாம் என்றும் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவர் 10ஆம் திகதி காலை 11 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக உள்ளார்