இலங்கைக்கு நிதி உத்தரவாதம் மிகவும் அவசரம்; அமெரிக்க திறைசேரி செயலாளர்
இலங்கைக்கான நம்பகமான நிதி உத்தரவாதம் மிகவும் அவசரம் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் யனெட் யெலென் ( janet yellen) தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அழுத்தத்தில் உருவாகிவரும் சந்தைகளிற்கான அர்த்தபூர்வமான கடன் நடவடிக்கைகளில் சீனா உட்பட அனைத்து கடன் கொடுப்பனவு நாடுகளும் கலந்துகொள்ளவேண்டும் என அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் எனவும் அவர் ( janet yellen) குறிப்பிட்டுள்ளார்.
பல நாடுகளின் முன்னோக்கிய வளர்ச்சியை தடுத்துவைத்துள்ள கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு இணைந்து பணியாற்றுவது அவசியம் எனவும் அவர் ( janet yellen) வலியுறுத்தியுள்ளார்.
அதேசமயம் குறைந்தவருமான நாடுகளில் 55 வீதமானவை கடன் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளன என சர்வதேச நாணயநிதியம் மதிப்பிடுகின்றது என யனெட் யெலென் ( janet yellen) குறிப்பிட்டுள்ளார்