2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தயாரிப்பதற்கான இறுதிக் கட்ட உத்தியோகபூர்வ கலந்துரையாடல்
2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தயாரிப்பதற்கான இறுதிக் கட்ட உத்தியோகபூர்வ கலந்துரையாடல், இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் அரசாங்க அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இதன்படி, தயாரிக்கப்படும் 2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        