சின்னத்திரை கலைஞர்களை சோகத்தில் ஆழ்த்திய இயக்குநர் மரணம்
சீரியல் இயக்குநர் எஸ்.என் சக்திவேல் உடல்நலக்குறைவால் இன்று (30) அதிகாலை காலமானார். '
சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற சீரியல் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் எஸ்.என் சக்திவேல். அவர் இயக்கிய 'தண்ணீரில் கண்டம்' திரைப்படம், ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது.
இருப்பினும், இவரது முழுத் திறமையையும், நகைச்சுவை உணர்வையும் வெளிப்படுத்தியது சின்னத்திரைதான். இவர், கடைசியாக 'பட்ஜெட் குடும்பம்' என்ற சீரியலை இயக்கியிருந்தார்.
சீரியல் இயக்குநர் எஸ்.என். சக்திவேலின் மறைவு, சின்னத்திரை கலைஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவருடன் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.