உலக கிண்ண கால்பந்து போட்டி ;ஆர்ஜன்டீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சௌதி!
22-வது உலக கிண்ண கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் ஆர்ஜன்டீனா மற்றும் சௌதி அரேபியா அணிகள் மோதின.
இதன்போது போட்டின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஆர்ஜன்டீனா அணியினர் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர். தொடர்ந்து போட்டியின் 10 வது நிமிடத்தில் ஆர்ஜன்டீனா அணிக்கு பெனால்டி கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய அணியின் கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார்.
இதற்கு பதிலடி கொடுக்க எதிரணி வீரர்கள் போராடயும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் 1 - 0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதியில் ஆதிக்கம் செலுத்திய சௌதி அரேபியா அணியின் சலே அல்ஷெரி 48வது நிமிடத்திலும், சலேம் அல்தாவசாரி 53வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
இதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பதிலடி கொடுக்க ஆர்ஜன்டீனா அணி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முடிவில் 2 - 1 என சௌதி அரேபியா அணி வெற்றி பெற்றது.