யாழ்ப்பாணத்துடனான கப்பல் போக்குவரத்து ; மீண்டும் திகதியில் மாற்றம்
தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு நேற்று 10 ஆம் திகதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து நாளை 12 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் குறித்த திகதி மீண்டும் மாற்றப்பட்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி காலை 7 மணிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு
மத்திய அமைச்சர்கள் கூடுதலாக நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதால் திகதி மாற்றம் எனக் கூறப்படுகிறது.
மேலும் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இதில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.