பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த பெண் யூடியூபர்
இந்தியாவின் அரியானா மாநிலத்தை சேர்ந்த பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா. இவருக்கு யூடியூபில் 3 லட்சத்து 77 ஆயிரம் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
இன்ஸ்டாகிராமிலும் அதிக பின்தொடர்பவர்கள் உள்ளனர். இதனிடையே, யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கடந்த 2023ம் ஆண்டு பாகிஸ்தான் சென்றுள்ளார்.
பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த மல்ஹோத்ரா
அந்த பயணத்தின்போது பாகிஸ்தான் உளவு அமைப்புடன் ஜோதிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த இஷன் உர் ரஹ்மானுக்கும் ஜோதிக்கும் தொடர்பு ஏற்பட்டது.
இதையடுத்து, இந்தியா வந்த மல்ஹோத்ரா, அரியானா, பஞ்சாப்பில் உள்ள ராணுவ நிலைகள் தொடர்பான விவரங்களை உளவுபார்த்து பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த மல்ஹோத்ராவை அரியானா பொலிஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
அவரின் கூட்டாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.