பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
கம்பஹா மாவட்டம் மீரிகமவில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பஸ்யாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில், அம்பேபுஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான வரகாப்பொல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மீரிகமவிலிருந்து பஸ்யாலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர் அதே திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளை கடந்து செல்லும் போது எதிர்த்திசையில் வந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானார்.
விபத்துக்குள்ளாக பெண் பொலிஸ் அதிகாரி வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .