பெண் உயிரிழப்பு; சிவனொளிபாத கடைவீதிகளில் அதிரடிச்சோதனை!
சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதியில் கடைகளில் விசேட பரிசோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடைகளில் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக இரத்தினபுரி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்தார்.
பெண் உயிரிழப்பு
லிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஸ்ரீ பாத வீதியில் உள்ள பெருமாண்டியா பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த பெண்ணே உயிரிழந்தவராவார்.
காய்ச்சல், வாந்தி, தலைவலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளைக் காட்டியுள்ள லிஸ்டீரியா, அசுத்தமான உணவு மூலம் பக்டீரியாவை உட்கொள்வதால் நோய்த்தொற்று ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதேவேளை இந்நோய் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என மருத்துவர் ஸ்ரீனி அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார்.