பெண் விவகாரம்; மருத்துவரை தாக்கியோருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு
யாழ்.கொடிகாமம் பிரதேச மருத்துவமனை வைத்தியர், இளம்பெண் ஒருவருடைய தொலைபேசி இலக்கத்தை கேட்டதாக கூறி வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்தியரை தாக்கிய குற்றச்சாட்டில் 8 பேர் கைதாகியிருந்தனர்.
இந்நிலையில் கைதான 8 பேரையும் எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க சாவகச்சோி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை மருத்துவமனைக்குள் புகுந்த இளைஞர்கள் குழு இளம் பெண்ணிடம் தொலைபேசி இலக்கம் கேட்டதாக கூறி மருத்துவர் மீது தாக்குதல் நடத்திருந்தது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் 8 பேரை கைது செய்து கடந்த வெள்ளிக்கிழமை சாவகச்சோி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களை 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.