காலி கோட்டை சுவரை பார்வையிடுவதற்கு கட்டணம்
காலி கோட்டை சுவரை பார்வையிடுவதற்காக பிரவேசிக்கும் வெளிநாட்டவர்களிடம் கட்டணம் அறவிட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை காலி பாரம்பரிய அறக்கட்டளை மற்றும் மத்திய கலாசார நிதியம் என்பன இணைந்து தீர்மானித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
காலி கோட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
கட்டணம்
காலி கோட்டையை பார்வையிட பிரவேசிக்கும் வெளிநாட்டவரிடம் 15 அமெரிக்க டொலரும், சிறார்களிடம் 7 அமெரிக்க டொலரும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு தாங்கள் எதிர்ப்பினை வெளியிடுவதாக காலி கோட்டை பகுதியைச் சேர்ந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.