கட்டணம் குறைப்பு; பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல்!
யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை இரு நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதன் காரணமாக , இரு நாடுகளுக்கும் இடையே பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வாரத்தில் மூன்று நாட்கள்
வாரத்தில் மூன்று நாட்கள் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு விமானங்கள் வந்து அன்றைய தினமே இந்தியாவிற்கு திரும்பும்.
இந்நிலையில் ஒரு விமானப் பயணத்தில் 60 பயணிகளுக்கு பல வசதிகளுடன் பயணிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் விமானப் பயணச்சீட்டுக் கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் யாழ்ப்பாண விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இரு நாட்டு பயணிகளுக்கும் வசதிகளை விரிவுபடுத்த விமான நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.