பிப்ரவரி மாத ராசி பலன்; 12 ராசிகளில் யாருக்கு அதிஸ்டம்; யாருக்கு கஸ்டம்!
ஜோதிடத்தின் அடிப்படையில் பிப்ரவரி 2023 மாதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சனி கும்பத்திற்கு பெயர்ச்சி ஆன நிலையில், சுக்கிரன், சனி சேர்க்கை நிகழ்கிறது. தொடர்ந்து சூரியனும் கும்ப ராசிக்கு இந்த மாத நடுவில் மாறுவார். புதனும் கும்பத்தில் சேர உள்ளார்.
இப்படி பல கிரகங்கள் கும்ப ராசியில் கூடக் கூடிய நிலை உருவாகிறது. அந்தவகையில் பிப்ரவரி மாத ராசி பலன் யார் யாருக்கு எப்படி இருக்கப்போகின்றது என்பதனை தெரிந்துகொள்வோம்.
மேஷம் ;
மேஷ ராசிக்கு பிப்ரவரி மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால் நன்மைகள் உண்டாகும். உங்களிடம் யாரேனும் வாங்கியிருந்த பணம் வராமலிருந்தால் அது திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. நீங்கள் செய்த முதலீடுகளுக்கு நல்ல லாபத்தைப் பெற்றிடலாம். பெற்றோரின் உதவி கிடைக்கும்.
அரசு சார்ந்த வேலைகள் நிறைவடையும். சொந்த தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு மிகவும் சாதகமான காலமாக இருக்கும். நண்பர்களின் முழு ஆதரவைப் பெற்றிட முடியும். சுற்றுலா, சிறிய பயணம் என எங்காவது செல்ல திட்டமிடுவீர்கள். உங்களின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வது நல்லது.
ரிஷபம்;
ரிஷப ராசிக்கு சிறப்பான மாதமாக அமைய உள்ளது. நீங்கள் செய்யும் வேலை, தொழிலை மேம்படுத்த நல்ல ஆலோசனைகளும், புதிய தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவீர்கள். மேலதிகாரிகள், சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக கிடைக்கும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்
உங்களின் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய மாதமாக இருக்கும். வயிறு தொடர்பான சில பிரச்னைகள் மாத தொடக்கத்தில் உங்களைத் தொந்தரவு செய்யலாம். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள், நிதானமாகவும் அமைதியாகவும் இருப்பது உடல் நலத்திற்கு நன்மை தரும்.
மிதுனம்;
மிதுன ராசிக்கு சில ஏற்ற இறக்கங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். உங்கள் செயல்களுக்கான பலன்கள் மெதுவாக கிடைக்கும். நீங்கள் செய்த முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். மாதத்தின் தொடக்கம் முதல் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்றாக இருக்கும்.
மாதத்தின் பிற்பகுதியில் சில வேலை தொடர்பான மன அழுத்தங்கள் உங்களை சிரமத்திற்கு ஆளாக்கும். பொறுமையுடன் செயல்படுங்கள். உங்கள் பேச்சில் நிதானமும், தெளிவாகவும் இருப்பது நல்லது.
கடகம்;
கடக ராசிக்கு பிப்ரவரியில் நடக்கும் கிரகங்களின் மாற்றம் இனிமையான பலனைத் தருவதாக இருக்கும். மூதாதையர் அல்லது குடும்பச் சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. சுக்கிரனின் அமைப்பால் உங்களின் செல்வாக்கு, வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
நிதி நிலை சிறப்பாக இருக்கும். பண பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவும். உங்களின் காதல் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். திருமண வாழ்க்கையில் உங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். சூரியனின் அமைப்பால் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
சிம்மம் ;
உங்களின் நேர்மறையான மன நிலை காரணமாக, வேலை, தொழிலில் நிறைய சாதிக்க முடியும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களின் இலக்குகளை அடைய வாய்ப்புள்ளது. உங்களின் தொழிலும், நிதி நிலையும் உயரும். வியாபாரம் சார்ந்த சாதகமான முடிவுகளைக் காண்பீர்கள்.
பிப்ரவரி 2023 முதல் பாதியில் உடல்நலம் தொடர்பான சில சிறிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சளி மற்றும் இருமல் என சிறியளவில் உங்கள் உடல் நிலை தொந்தரவு செய்யக்கூடும். உறவினர்களிடம் பணம் சார்ந்த சில தகராறுகள் ஏற்படலாம். உறவு விஷயத்தில் கவனம் தேவை.
கன்னி;
கன்னி ராசிக்கு பல விதத்தில் நற்பலன் கிடைக்கக்கூடியதாக இருக்கும். வேலைக்கு தயாராகும் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் ஆன்மிக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வீர்கள். உடன்பிறந்தவர்களுடனான உங்கள் உறவு வலுவாக இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணத்தை மிச்சப்படுத்த முடியும். புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கும். அன்பானவரின் உதவியுடன், தடைபட்ட வேலைகள் முடிவடையும். வியாபாரிகளுக்கும் லாபகரமான சூழ்நிலை இருக்கும்.
துலாம்;
உங்கள் தொழில், வியாபாரத்தில் சில குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்படும். தொழில் சார்ந்த பயணங்கள் அதிகமாக இருக்கும். பணியிடத்தில் எந்தவிதமான மோதல்களையும் தவிர்ப்பது அவசியம். உங்கள் மேலதிகாரிகள், சக ஊழியர்களுடன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ளுங்கள்.
இந்த வாரம் ஆரோக்கியம் சற்று தொந்தரவைத் தரக்கூடியதாக இருக்கும். மூட்டு வலி மற்றும் தூக்கமின்மை பிரச்னைகள் ஏற்படலாம். மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.
கோபம், உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். உறவுகள் வலுவாக பொறுமையுடன் நடந்து கொள்ளவும். காதலில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும்.
விருச்சிகம் ;
பிப்ரவரி மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. இதன் போது, உங்களுக்கு பல லாப வாய்ப்புகள் கிடைக்கும், மேலும் குழந்தைகளின் முன்னேற்றத்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வேலையில் உங்கள் மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள்.
குடும்பத்துடன் ஆன்மிக வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். உங்கள் படைப்புகள் சமூகத்தில் பாராட்டப்படுவதோடு மரியாதையும் அதிகரிக்கும். கிரகங்களின் தாக்கத்தால், இந்த காலகட்டத்தில் உங்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
தனுசு ;
தனுசு ராசிக்காரர்களுக்குப் பிப்ரவரி மாதம் சாதகமாக இருக்கும். உங்கள் வாழ்வில் நிதானம். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த காரியம் நிறைவேறி அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் புனித யாத்திரை செல்லலாம் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பீர்கள்.
கிரகங்களின் செல்வாக்குடன், நீங்கள் ஆற்றல் மிக்கவராக உணருவீர்கள். மேலும் உங்கள் முடிவெடுக்கும் திறன்களும் முழு பலனைப் பெறும். இந்த காலகட்டத்தில், வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்கள் லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
மகரம் ;
மகர ராசிக்கு பிப்ரவரி மாதம் கவனமாகவும், கடினமாகவும் உழைக்க வேண்டியது அவசியம். நிதி நிலை ரீதியாக சிறப்பான மாதம் என்று சொல்ல முடியாது. வீண் மற்றும் கூடுதல் செலவுகளைத் தவிர்க்க முயலவும். பண விஷயங்களில் கவனம் தேவை.
ஆரோக்கியம் சிறக்க சரியான ஓய்வு தேவைப்படும். சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துக் கொள்ளவும். உடல் பரிசோதனைகளைச் செய்து கொள்வது நல்லது. உறவுகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும். குடும்ப பொறுப்புகள் உங்களுக்கு சற்று மன அழுத்தம் தரக்கூடியதாக இருக்கும்.
கும்பம்;
கும்ப ராசிக்கு இந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் சில பாடங்களைக் கற்றுத் தரும். உங்கள் தொழில், வியாபாரத்தில் புதிய திட்டங்கள், வித்தியாசமான அணுகுமுறையைக் கையாளவும். சூழலை புரிந்து கொண்டு நடந்து கொள்ளவும்.
அக்டோபர் மாதம் வரை பண விஷயங்களிலும், முதலீடுகளிலும் ரிஸ்க் எடுக்க வேண்டாம். மாத தொடக்கத்தில் உடல் நலம் சிறப்பாக இருக்கும் என்றாலும், மாதப் பிற்பாதியில் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
13ம் தேதிக்கு பின் கும்பத்தில் சனி சூரியன் சேர்க்கை ஏற்படுவதால் குடும்பத்திலும், உங்கள் காதல், வாழ்க்கைத் துணையுடன் ஈகோ, கருத்து மோதல் ஏற்படலாம். பொறுமையாக, புரிந்து கொண்டு நடப்பது அவசியம்.
மீனம் ;
மீன ராசிக்கு பிப்ரவரி மாதம் கவனமாக இருக்க வேண்டிய மாதம். பணியிடத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்காமல் போகலாம். நேர்மறையான மன நிலையுடன் செயல்படவும்.
அதிக செலவு செய்வதை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது இருக்கும். தூக்கமின்மையால் பாதிக்கப்படலாம்.
பேச்சில் கவனம் தேவை. நிதானமாக, கனிவாக பேசவும். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மதிப்பு கொடுத்து நடந்து கொள்ளவும். தற்பெருமை மற்றும் அகங்காரமாக இருப்பதை தவிர்க்கவும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.