பிப்ரவரி மாத ராசி பலனில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்!
2023ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமான பெப்ரவரி மாதத்தில் நவ கிரகங்களின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு நன்மையைத் தரும், சில ராசிக்காரர்களுக்கு திடீர் திருப்புமுனையை ஏற்படுத்தும்.
இதேவேளை, சனியின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். பெப்ரவரி மாதத்தில் சூரிய பகவான் மகர ராசியில் பாதி நாட்களும் கும்ப ராசியில் 15 நாட்களும் பயணம் செய்வார்.
சுக்கிரன் கும்ப ராசியிலும் 15ஆம் திகதிக்கு மேல் மீன ராசியில் உச்சம் பெற்றும் பயணம் செய்வார். புதன் மகர ராசியிலும் மாத இறுதியில் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
செவ்வாய் மாதம் முழுவதும் ரிஷப ராசியில் பயணம் செய்வார். இந்த கிரகங்களின் பயணத்தால் துலாம், விருச்சிகம், தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
துலாம் : துலாம் ராசியில் வீட்டில் கேது, மூன்றாம் வீட்டில் புதன் நான்காம் வீட்டில் சூரியன், ஐந்தாம் வீட்டில் சனி, ஆறாம் வீட்டில் குரு, ஏழாம் வீட்டில் ராகு எட்டாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
இந்நிலையில், அறிவும் திறமையும் அதிகரிக்கும். வேலையில் புரமோசன், பதவி உயர்வு தேடி வரும். குடும்பத்துடன் சிறு பயணங்கள் செல்வீர்கள். குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் வரலாம். நிறைய சந்தோஷங்கள் அதிகரிக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேருவீர்கள். உறவினர் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள்.
பெப்ரவரி மாத பிற்பகுதியில் 4ஆம் வீட்டில் உள்ள சூரியன் இடப்பெயர்ச்சியாகி 5ஆம் வீட்டில் உள்ள சனி உடன் மாத பிற்பகுதியில் இணைகிறார். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமண சுப காரியங்கள் கை கூடி வரும். எதிர்காலத்தைப் பற்றி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
விருச்சிகம் : இந்த ராசிக்காரர்களுக்கு பெப்ரவரி மாதம் அற்புதங்கள் அதிகம் நடைபெறப்போகிறது. காரணம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசியில் 12ஆம் வீட்டிர் கேது, 7ஆம் வீட்டில் செவ்வாய், 4ஆம் வீட்டில் சுக்கிரன் சனி, 3ஆம் வீட்டில் சூரியன், 5ஆம் வீட்டில் குரு, 6ஆம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
குரு பார்வையால் உங்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் சூரியன் நான்காம் வீட்டில் பயணம் செய்வார். சுகமான மாதமாக அமைந்துள்ளது. பொருள் வரவு அதிகரிக்கும். திருமண குடும்ப வாழ்க்கையிலும் காதலும் அதிகரிக்கும். ஏழாம் வீட்டில் உள்ள செவ்வாய் பகவானால் குடும்பத்தில் கார சார விவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நான்காம் வீட்டில் சூரியன் சனி உடன் இணையும் போது அதிர்ஷ்டகாலம் ஆரம்பமாகிறது. சுப ஸ்தானத்தில் சூரியன் இணைவதால் உங்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும். அதிர்ஷ்டமான காலம் ஆரம்பமாகிறது. வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். இந்த மாதத்தில் திருமண சுப காரியங்கள் கை கூடி வரும்.
தனுசு : இந்த ராசிக்காரர்களுக்கு பெப்ரவரி மாதம் உங்கள் ராசிக்குள் சுக்கிரன் செவ்வாய் பயணம் செய்கின்றனர். 2ஆம் வீடான வாக்கு ஸ்தானத்தில் பயணம் சூரியன், சனி, புதன் சஞ்சரிக்கின்றனர். 3ஆம் வீட்டில் குரு, 6ஆம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானமான 12வது வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
இந்த மாதத்தில் உங்களுக்கு முகப்பொலிவு கூடும். திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். குரு சந்திர யோகம் கை கூடி வரப்போகிறது. நவ கிரகங்களின் பயணம் சாதகமாகவே உள்ளது. ராகு கேதுக்குள் கிரகங்கள் அடங்கியுள்ளன. சர்ப்ப தோஷம் கூடியுள்ளது.
வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை கை கூடி வரும். இலக்கை நோக்கி பயணம் செய்யப்போகிறீர்கள். ராசி நாதன் குரு நான்காம் வீட்டில் இருப்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். உயர்கல்வி யோகம் கிடைக்கும்.
சூரியன் மாத பிற்பகுதியில் சனி உடன் மூன்றாம் வீட்டில் இணைவதால் அதிர்ஷ்டம் கை வரப்போகிறது. வாக்குக்கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். பல விசயங்களை வெளிப்படுத்த வேண்டாம். தர்ம கர்மாதிபதி யோகம் வரப்போகிறது.
பெண்களுக்கு மனம் போல மாங்கல்யம் கை கூடி வரும். பெண்களின் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
நோய்கள் விலகும் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் உடல் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். பெப்ரவரி மாதத்தில் நன்மைகள் அதிகம் நடைபெறும் திடீர் அதிர்ஷ்டம் மூலம் பண வரவு அதிகரிக்கப்போகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.