தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட தந்தை,மகன்
தொழிற்சாலை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இன்று காலை குறித்த நபர் தனது மகனுடன் தொழிற்சாலையின் பாதுகாப்பிற்குச் சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காலை நேரத்தில் தொழிற்சாலைக்குள் நுழைந்த இருவரும் மதியம் 2:00 மணி வரை வெளியே வரவில்லை.
இறந்தவர் ரப்பர் தொழிற்சாலையின் நிர்வாக தர அதிகாரி என்பது தெரிய வந்தது.அங்கு விடுமுறையில் இருந்ததால் தொழிற்சாலையின் பாதுகாப்பு குறித்து விசாரிக்க அங்கு சென்றுள்ளார். தொழிற்சாலைக்கு தண்ணீர் சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்ட தொட்டியில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
உயிரிழந்தவர்கள் காலி அக்மீமன பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        