மட்டக்களப்பில் சடலமாக மீட்கப்பட்ட 7 பிள்ளைகளின் தந்தை!
மட்டக்களப்பு பகுதியில் நேற்றிரவு உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் வெல்லாவெளி, நவகிரி நகர் 38 ஆம் கிராமத்தின் வயற் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் வெல்லாவெளி, நவகிரி நகர் 38 ஆம் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதுடைய 7 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வெல்லாவெளி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி, களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமை சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டுள்ளார்.
மீட்கபட்ட ஆணின் சடலத்தை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தி பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்கமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டதுடன், இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளது வருகின்றனர்.