16 வயது மகனின் தாக்குதலில் தந்தை உயிரிழப்பு
பொலன்னறுவை பகுதியில் 16 வயது மகனால் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் , 16 வயதுடைய சந்தேக நபரான அவரது மகன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குடும்பத்தகராறு
பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 14 ஆம் திகதி இரவு குடி போதையில் வீட்டுக்கு வந்துள்ளதுடன் மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரும்புக்கம்பியால் அவரை தாக்குவதற்கு முயற்சித்துள்ளார்.
இதன் போது அதனை தடுப்பதற்கு முயற்சித்த அவரின் மகன் மற்றும் மகள் மீதும் அவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தகராறு வலுப்பெற அவரது மகன் இரும்பு கம்பியால் தந்தையை தாக்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 46 வயதுடைய வௌதென்ன, பொன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். தாக்குதல் மேற்கொண்ட 16 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பொலன்னறுவை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.